‘மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறியே வெக்கமா இல்லையா’ அஜித்தின் துணிவு ட்ரைலர்!

பொங்கல் விருந்தாக வெளியாகவிருக்கும் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ajith, Thunivu, H. Vinoth, 31th Dec 2022

இந்தநிலையில் 2 நிமிடம் 18 விநாடிகள் உள்ள இந்த ட்ரைலரின் ஒவ்வொரு காட்சியிலும் அதிரடி பஞ்ச் வசனங்கள் மற்றும் ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வில்லத்தனத்தின் உச்சத்தில் அஜித் துணிவு படத்தில் நடித்து இருக்கிறார். அஜித் தலைமையிலான கேங் ஒரு வங்கிக்குள் புகுந்து எல்லோரையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொள்கிறார்கள். ‘மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறியே வெக்கமா இல்லையா’ என பிரேம் கேட்க ‘இல்லை’ என அஜித் அவரது மாஸ்க்கை கழட்டிவிட்டு சொல்லும் காட்சி தான் ட்ரைலரில் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறது.

Ajith, Thunivu, H. Vinoth, 31th Dec 2022

மேலும் அஜித், மஞ்சுவாரியர் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள ‘துணிவு’ படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.