வரலட்சுமியின் மாறுபட்ட கதைக்களத்தில் ‘V3’ டிரைலர்!

தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்த ‘V3′ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Amuthavanan, Varalaxshmi, Sarathkumar, V3, 29th Dec 2022

அமுதவாணன் இயக்கத்தில் அலென் செபாஸ்டின் இசையில் சிவா பிரபு ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரி வேடத்தில் வரலட்சுமி நடித்திருக்கிறார். மேலும் பாவனா, எஸ்தர் அனில், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Amuthavanan, Varalaxshmi, Sarathkumar, V3, 29th Dec 2022

இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த டிரைலரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் த்ரில், சஸ்பென்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் வரலட்சுமியின் நடிப்பு அசத்தலாக உள்ளது என்பது தெரியவருகிறது.
மொத்தத்தில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.