திரிஷாவின் அதிரடியான நடிப்பில் ராங்கி பட ட்ரைலர் ரிலீஸ்!

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கதையில் ’எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரிஷா நடித்த ‘ராங்கி’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ள நிலையில் இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

AR Murugathas, Trisha, Raangi, 23th Dec 2022

கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்கள் இருக்கும் இந்த ட்ரெய்லரில் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் அளவிற்கு த்ரிஷாவின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்தப்படத்தில் பிரபல மலையாள நடிகரான அனஸ்வர ராஜன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

AR Murugathas, Trisha, Raangi, 23th Dec 2022


சி.சத்யா படத்திற்கு இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்த படம் வரும் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் டூப் இன்றி த்ரிஷா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.