சுந்தர் சி யின் அசத்தலான நடிப்பில் ‘தலைநகரம் 2’ டீஸர் ரிலீஸ்!

கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான சுந்தர் சி நடித்த ’தலைநகரம்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மீண்டும்16 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sundar C, Thalainakaram 2, thurai, Suraj, 15th Dec 2022

இந்த நிலையில் சற்று முன் ‘தலைநகரம் 2’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியான வடிவேலு நடித்த ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட பல திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுராஜ் தலைநகரம்’ படத்தை இயக்கிய நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை துரை இயக்கியுள்ளார். இவர் அஜித் நடித்த ’முகவரி’ சிம்பு நடித்த ’தொட்டி ஜெயா’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ‘தலைநகரம் 2’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சுந்தர் சி ஜோடியாக பாலக் லால்வானி நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ளனர்.

Sundar C, Thalainakaram 2, thurai, Suraj, 15th Dec 2022

சுதர்சன் படத்தொகுப்பில் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரைட் ஐ தியேட்டர் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.