தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்து மிகப்பெரிய அளவில் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் வேற லெவலில் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மெட்ரோ ரயிலில் ’வாரிசு’ படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த மாஸ் புரமோஷனை பார்த்து ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கபாலி’ திரைப்படம் விமானங்களிலும் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ரயில்களிலும் புரமோசன் செய்யப்பட்ட நிலையில் தற்போது தளபதியின் ’வாரிசு’ படமும் அதே போல் பிரமாண்டமாக புரமோஷன் செய்யப்பட்டுள்ளது.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலரும் நடித்துள்ளனர்.