‘ஜெயிலர்’ படைப்பின் கிளிப்ஸ் வீடியோ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படைப்பின் கிளிப்ஸ் வீடியோ ஒன்றை என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Jailer, Rajinikanth, Anirudh, Nelsan, 12th Dec 2022

ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலான காட்சிகள் இருப்பதை அடுத்து ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.