முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கொண்ட விஷாலின் ‘லத்தி’ ட்ரைலர்!

வினோத்குமார் இயக்கத்தில் ரானா மற்றும் நந்தா தயாரிப்பில் விஷால் நடிப்பில் உருவான ‘லத்தி’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது.

Laththi, Vinothkumar, Vishal, Rana, Nandha, Sunaina, 12th Dec 2022

இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த டிரைலரில் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கொஞ்சம் ரொமான்ஸ் மற்றும் தந்தை – மகன் பாசக் காட்சிகள் என்பனவும் முடிவு பெறாத கட்டிடம் ஒன்றில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன என்பதும் விஷால் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளுக்காகவே அதிக சிரத்தை எடுத்திருக்கிறார் என்பதும் ஒவ்வொரு காட்சியில் இருந்து தெரியவருகின்றது.

Laththi, Vinothkumar, Vishal, Rana, Nandha, Sunaina, 12th Dec 2022

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் உருவாகும் இந்தப்படம் விஷாலுக்கு நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை அசத்தலாக உள்ளதை அடுத்து இந்த படத்தின் பாடல்களும் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.