‘இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க சியேஸ்’ அஜித்தின் துணிவு பட மாஸ் பாடல் ரிலீஸ்!

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடல் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Vaisak, Jipran, Anirudh, Ajith, H vinoh, Thunivu, 09th Dec 2022

வைசாக் எழுதி உள்ள இந்தப்பாடலை ஜிப்ரான் இசையமைத்துள்ளதுடன் பாடலை அனிருத் பாடியுள்ளார். இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே எழுந்து ஆட்டம் போட வைக்கும் வகையில் உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Vaisak, Jipran, Anirudh, Ajith, H vinoh, Thunivu, 09th Dec 2022

இந்த பாடல் சற்று முன் வெளியாகிய இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்து வரும் நிலையில் இந்த பாடல் நிச்சயம் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது.