லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள ‘கனெக்ட்’ டிரைலர்

‘மாயா’ இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘கனெக்ட்’ என்ற திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Connect, Nayanthara, Sathiyaraj, Vinai, 09th Dec 2022

இந்த ட்ரெய்லரில் நயன்தாரா குடும்பத்தினர் இருக்கும் வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா வழக்கம்போல் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சத்யராஜ், அனுபம்கெர் போன்ற சீனியர் நடிகர்களுடன் நயன்தாரா நடித்துள்ளதுடன் மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்கள் வினய் மற்றும் ஹனியா நப்சியா நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Connect, Nayanthara, Sathiyaraj, Vinai, 09th Dec 2022

மேலும் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் ரிசார்ட் கேவின் படத்தொகுப்பில் பிரித்வி சந்திரசேகர் இசையில் உருவாகியுள்ள இந்த படம் நயன்தாராவின் இன்னொரு வெற்றி படமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.