’துணிவு’ படக்குழுவினர்களுக்கு வந்த அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

தல அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக வரும் 8ஆம் தேதி அதாவது நாளை இந்த படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாக உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருந்தது.

H. Vinoth, Ajith, Thunivu, 07th Dec 2022

இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ள இந்தப்பாடலை ஜிப்ரான் கம்போஸ் செய்திருக்கும் நிலையில் இந்தப்பாடல் ’வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற ’ஆலுமா டோலுமா’ பாடல் போல் ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நாளை ’சில்லா சில்லா’ பாடல் அதிகாரபூர்வமாக வெளியாக இருக்கும் நிலையில் திடீரென நேற்றே இந்த பாடலின் ஒரு சிறுபகுதி இணையதளங்களில் லீக்காகி படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனடியாக படக்குழுவினர் லீக்கான பகுதியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் முதல் பாடல் லீக்கான அதிர்ச்சியிலிருந்து படக்குழுவினர் மீளாத நிலையில் தற்போது ’காசேதான் கடவுளடா’ என்ற பாடலின் ஒரு சில பகுதிகள் லீக்காகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் லீக் ஆகி வருவது ’துணிவு’ படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.