தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் சொந்தக்குரலில் பேசி உள்ளாரா? யார் அந்த பிரபலம்

Vinothkumar, Rana, Nandha, Laththi, Vishal, Sunaina 07th Dec 2022

வினோத் குமார் இயக்கத்தில் விஷாலின் நண்பர்களான நடிகர்கள் ராணா மற்றும் நந்தா தயாரிப்பில் நடிகர் விஷால் நடித்து முடித்துள்ள ’லத்தி’ என்ற திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ் திரையுலகின் ஆக்சன் ஹீரோவாக விளங்கும் விஷால் என்பதும் இவரது படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vinothkumar, Rana, Nandha, Laththi, Vishal, Sunaina 07th Dec 2022

இந்த நிலையில் ’லத்தி’ படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் விஷால் தனது பகுதிக்கான டப்பிங்கை பேசி முடித்துள்ளதுடன் அவர் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் சொந்தக்குரலில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் விஷால் டூப் இன்றி பல காட்சிகளில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்ததால் இரண்டு முறை காயம் ஏற்பட்டது. ,மேலும் இந்தப்படம் பெரிய வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்டுகின்றது.