நட்டி நடராஜின் வித்தியாசமான நடிப்பில் வெளிவரவுள்ள ‘குருமூர்த்தி’: ரிலீஸ் தேதி

நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சாய்சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. இந்தப்படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன் படத்தின் கதாநாயகியாக பூனம் பஜ்வா மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான அறிமுகமான இவர் , இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanasekaran, Naddi nadraj, Gurumoorthy, 07th Dec 2022

மேலும் தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு செய்துள்ளார். தேவராஜ் அவர்கள் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தில் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

Thanasekaran, Naddi nadraj, Gurumoorthy, 07th Dec 2022

‘குருமூர்த்தி’ படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜெகதா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படம் டிசம்பர் ஒன்பதாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.