சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் தேதி குறித்து வெளிவந்த தகவல்

தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Maveeran, Sivakarhikeyan, Aditi Shankar, 07th Dec 2022

இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது பகுதிக்கான காட்சிகளின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்து விட்டார் என்றும் அனேகமாக இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிற நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜனவரி முதல் தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Maveeran, Sivakarhikeyan, Aditi Shankar, 07th Dec 2022

மேலும் அஜித்தின் ’துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ ஜனவரியில் வெளியாவதால் அந்த படங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை ஓடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் ‘மாவீரன்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடித்து வரும் நிலையில் படத்தில் மிஸ்கின் மற்றும் ’புஷ்பா’ சுனில் ஆகிய இருவரும் வேற லெவல் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நடிகை சரிதா ஒரு அட்டகாசமான குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.