சென்னையை விட்டு சொந்த ஊருக்கு செல்லவுள்ள ரம்யா பாண்டியன் – காரணம் என்ன?

நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர்.

இந்த நிலையில் நடிகை ரம்யாபாண்டியன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை வியக்க வைக்கும் இவர் தற்போது தனது சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாக இன்ஸ்ட்ராகிராமில் அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்திலுள்ள ஆழ்வார்திருநகரி தான் தனது சொந்த ஊர் என்றும் குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் குடும்பத்துடன் குற்றாலம் செல்ல இருப்பதாகவும் சந்தோஷமாக தருணமாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.