‘தங்கலான்’ படப்பிடிப்பின் போது அருவியில் ஆட்டம் போட்ட விக்ரம் வைரல் வீடியோ!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் ’தங்கலான்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒகேனக்கல் அருகே நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்தது.

Vikram, Thangaalan, PA Ranjith, 06th Dec 2022

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் படக்குழுவினர் ஒகேனக்கல் அருவியில் ஆட்டம் போட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்ற நிலையில் இந்த வீடியோவில் விக்ரம், பா ரஞ்சித் உள்பட படக்குழுவினர் உள்ளனர். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விக்ரம் பதிவு செய்து கூறியிருப்பதாவது:

இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது. பேக்கப் என்று கேட்டதும் ஒரே குதி.. தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?!அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியில் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம் என்று பதிவிட்டுள்ளார்.

கோலார் தங்க வயல் குறித்த கதையம்சம் கொண்ட பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கிய படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.