கடந்த மாதம் 11ஆம் தேதி சமந்தா நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியானது. இந்தநிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘யசோதா’ திரைப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூபாய் 30 கோடிக்கும் அதிகமாக உள்ளதாகவும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட ஒரு படம் இந்த அளவு வசூல் செய்வது பெரும் சாதனை என்பத்தும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘யசோதா’ திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவது குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் வாங்கிய நிலையில் இந்த படத்தை டிசம்பர் 9ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியிட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.