‘வாரிசு’ படத்தில் பாட்டு மட்டுமன்றி சிம்பு நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளாரா?

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது ஏற்கனவே வந்த செய்திகளில் வெளிவந்தது.

Varisu, Vijay, Simbu, Vamsy, 06th Dec 2022

இதுமட்டுமன்றி இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளதுடன் இந்தப்பாடல்கள் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் சாதனை செய்துள்ளது.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியான ‘தீ’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் சிம்பு பாடிய இந்த பாடல் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Varisu, Vijay, Simbu, Vamsy, 06th Dec 2022

இந்த நிலையில் விஜய் நடித்துள்ள ’வாரிசு’ படத்தில் சிம்பு பாடியது மட்டுமின்றி ஒரு சிறிய கேரக்டரில் நடித்தும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு நடிக்கும் காட்சியில் விஜய்யும் இருப்பாரா? அல்லது சிம்பு மட்டும் தனியாக வரும் காட்சி உள்ளதா? என்பதை படம் பார்த்தால் தான் தெரியும்.

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா சிறிய கரெக்டரில் வந்தது போல ‘வாரிசு’ படத்தில் சிம்பு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.