‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Boney Kapoor, Jipran, Thunivu, H Vinoth, Anirudh, Ajith, 05th Dec 2022

எச் வினோத் இயக்கத்தில் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ள அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தில் இடம்பெற்றுள்ள ’சில்லா சில்லா’ என்ற பாடலை அனிருத் பாடியுள்ளதுடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த பாடல் திரையுலகில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் சற்று முன்பு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் டிசம்பர் 9ஆம் தேதி ‘துணிவு’ படத்தின் ’சில்லா சில்லா’ பாடல் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் இந்த பாடலை வரவேற்க அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்தப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.