செல்வராகவன் நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ டிரைலர்

இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பகாசூரன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

Mohanji, Selvaragavan, Bhakasuran, 05th Dec 2022

இந்த டிரைலரில் பெண்களை ஏமாற்றும் கும்பலை பழிவாங்கும் கேரக்டரில் செல்வராகவன் நடித்து இருக்கிறார் என்பது இருந்து தெரிய வருகிறது. அதேபோல் அந்த கும்பலை சட்டத்தின்படி நிற்க வைக்க இன்னொரு பக்கம் நட்டி நடராஜ் போராடி வருகிறார். இவர்கள் இருவரும் இணைவார்களா என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று தெரியவருகிறது.

Mohanji, Selvaragavan, Bhakasuran, 05th Dec 2022

மேலும் இப்படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், ராதாரவி, தேவதர்ஷினி, தேனப்பன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.