விடுதலை படப்பிடிப்பில் நிகழ்த்த விபத்து குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

Verrimaran, Viduthalai, Vijay Sethupathy, soori, Suresh, 05th Dec 2022

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் ’விடுதலை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்த போது அதில் ஏற்பட்ட விபத்தில் ஸ்டண்ட் நடிகர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

’விடுதலை’ இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் ஸ்டண்ட் நடிகர் சுரேஷ் என்பவர் காலமானதை அடுத்து தயாரிப்பு நிறுவனம் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

’விடுதலை’ படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் காலமானது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ’விடுதலை’ படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியை ஒன்று எடுத்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவர் காலமானார் என்றும் அறிவித்துள்ளது.

Verrimaran, Viduthalai, Vijay Sethupathy, soori, Suresh, 05th Dec 2022

மேலும் படப்பிடிப்பில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தும் சுரேஷை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்றும் அவர் எங்களை விட்டுச் சென்றது மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் எங்களது இதயங்களில் மாறாத வலியாக இன்று இருக்கும் என்றும் மறைந்த சுரேஷ் அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.