‘மக்களோடு மக்களாக நின்று போராடுறது தான் உண்மையான போராட்டம்’ – ‘ரத்த சாட்சி’ டிரைலர்

திரையுலகில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதையில் ரஃபிக் இஸ்மாயில் என்பவர் இயக்கத்தில் உருவான ’ரத்த சாட்சி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Jeyamohan, Rafik Ishmajill, 05th Dec 2022

இந்த படத்தின் டீசர் ஏற்கனவே கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பரம்பரை பரம்பரையாக அடிமையாக வைக்கப்பட்டிருந்த தொழிலாளிகள் பொங்கி எழுந்து முதலாளியின் கொடுமையை எதிர்ப்பது தான் இந்த படத்தின் கதை என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் இந்த டிரைலரில் உள்ள ஒவ்வொரு வசனமும் புரட்சிகரமாக இருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jeyamohan, Rafik Ishmajill, 05th Dec 2022

இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், ஹரிஷ் குமார், கல்யாண் மாஸ்டர் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ளது. ஜாவித் ரியாஸ் இசையில் உருவான இந்த படம் விரைவில் ஆஹா ஓடிடியில் நேரடியாக ரிலீசாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.