மறைந்த நடிகரின் குடும்பத்திற்கு உதவ முன்வந்துள்ள பிரபல நடிகர்

விஷ்ணு விஷால் நடித்த ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்ற நடிகர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 3 ஆம் தேதி காலமானார்.

Susinthiran, Vishnu vishal, Vennila Kabadi Kulu, Vairavan, Soori, 05th Dec 2022

இந்தநிலையில் அவருடைய மறைவுக்கு இயக்குனர் சுசீந்திரன், விஷ்ணுவிஷால், சூரி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர் என்பதும், அவருடைய குடும்பத்திற்கு உதவி செய்ய பலர் முன் வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் நடிகர் விஷ்ணுவிஷால் மறைந்த நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்பதாக அவரது மனைவியிடம் உறுதி அளித்துள்ளதுடன் மேலும் கடந்த ஆறு மாதங்களாக தன்னால் முடிந்த உதவிகளை வைரவனுக்கும் அவரது குடும்பத்திற்கும் செய்து கொண்டிருந்ததாகவும் நடிகர் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

Susinthiran, Vishnu vishal, Vennila Kabadi Kulu, Vairavan, Soori, 05th Dec 2022

இதுமட்டுமன்றி மேலும் சில நடிகர்கள் வைரவன் குடும்பத்தினருக்கு உதவிசெய்ய முன்வந்துள்ளதாகவும் இது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.