‘தமிழ் ரசிகர்கள் நல்ல படத்தை ஏற்றுக் கொள்வார்கள்’ ஜீவா கருத்து

சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் ஜீவா நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ என்ற திரைப்படம் வரும் 9-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ‘வரலாறு முக்கியம்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ‘பேசிய நடிகர் ஜீவா, ‘தமிழ் ரசிகர்கள் நல்ல படத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் ‘லவ் டுடே’ படம். ‘லவ் டுடே’ படத்தை போலவே இந்த ‘வரலாறு முக்கியம்’ படமும் நகைச்சுவை கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் ‘சிவா மனசுல சக்தி’ போன்ற ஒரு ஜாலியான படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்ட நிலையில்தான் ‘வரலாறு முக்கியம்’ படத்தின் கதையை கேட்டேன். சிவா மனசுல சக்தி படம் போல இந்த படம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இப்படத்தில் ஜீவா ஜோடியாக காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் நடித்திருக்க மேலும் கேஎஸ் ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version