கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் போஸ்டர் ரிலீஸ்

கீர்த்தி சுரேஷின் அடுத்த திரைப்படத்தை ‘கேஜிஎப்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பர்ஸ்ட் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Suman Kumar, Ragu thatha, keerthy suresh, 04th Dec 2022

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த வெற்றிப்படங்களான ‘கேஜிஎப்’ ’கேஜிஎப் 2’ மற்றும் ’காந்தாரா’ ஆகிய படங்களை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’ரகு தாத்தா’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுமன் குமார் என்பவர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்றும் கூறப்படுள்ளது.