விஜய் மற்றும் கமலுடன் நடிக்க விரும்பவில்லை – விஜய்சேதுபதி கருத்து

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் என்ற ஆக்ரோசமான வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

Vijay Sethupathy, Logesh Kanagaraj, Thalapathy 67, Vikram 3, 04th Dec 2022

இந்தநிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் விஜய்யின் ’தளபதி 67’ படத்தில் அவரது முந்தைய படங்களின் கேரக்டர்களான டெல்லி, ரோலக்ஸ் மற்றும் சில கேரக்டர்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் விஜய் சேதுபதி ’விக்ரம்’ படத்தில் சந்தானம் என்ற கேரக்டரில் நடித்திருந்த நிலையில், ‘தளபதி 67’ மற்றும் ’விக்ரம் 3’ படத்திலும் வருவார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் கசிந்துள்ளன.

Vijay Sethupathy, Logesh Kanagaraj, Thalapathy 67, Vikram 3, 04th Dec 2022

இந்த நிலையில் இதுகுறித்து விஜய் சேதுபதி சமீபத்தில் பேட்டியளித்த போது, ‘விக்ரம்’ படத்தோடு சந்தானம் காரக்டர் முடிந்துவிட்டது. இனி அந்த கேரக்டர் மீண்டும் உயிர்ப்பித்து வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள். எனவே ’விக்ரம் 3’ திரைப்படத்தில் அல்லது ’தளபதி 67’ படத்தில் சந்தானம் கேரக்டரில் நடிக்க நானும் விரும்பவில்லை என்று கூறினார்.

மேலும் ’தளபதி 67’ படத்தில் நடிக்க இதுவரை என்னை லோகேஷ் அணுகவில்லை என்றும் அவர் கூறினார். இதனை அடுத்து விஜய் சேதுபதி இனிமேல் சந்தானம் கேரக்டரில் நடிக்க மாட்டார் என்று நம்பப்படுகின்றது.