ஷிவானி நாராயணன் அம்மாவுடன் ஒரு செல்பி எடுத்த பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் சீசன் 4 அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ், பிக்பாஸ் 4 போட்டியாளரான ஷிவானி நாராயணன் மற்றும் அவருடைய அம்மாவுடன் செல்பி எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Balaji Murugadoss, Shivani narayanan, 02nd Dec 2022

பாலாஜி முருகதாஸ் சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு சின்னத் திரை உலகினர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பாலாஜி முருகதாசுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிக்பாஸ் ஷிவானி நாராயணன் அவருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தில் ஷிவானி நாராயணன் மற்றும் அவரது அம்மாவும் உள்ளனர்.

Balaji Murugadoss, Shivani narayanan, 02nd Dec 2022

மேலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடந்தபோது பாலாஜி முருகதாஸ் மீது அதிக கோபத்தில் இருந்த ஷிவானி நாராயணனின் அம்மா சமாதானம் ஆகி உள்ளார் என்பது இந்த செல்பி புகைப்படத்தில் இருந்து தெரியவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.