‘ஜெயிலர்’ படப்பிடிப்பு நடக்கும்போது நெல்சன் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளாரா?

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் பூர்த்தி அடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Anirudh, Nelshan, Jailer, Rajinikanth, 02nd Dec 2022

இந்தநிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த படத்தை திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் படத்தின் படப்பிடிப்பில் ஒரு சிறு இடைவெளி கிடைத்ததை அடுத்து தற்போது நெல்சன் கத்தார் நாட்டிற்கு சென்று உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க போயுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Anirudh, Nelshan, Jailer, Rajinikanth, 02nd Dec 2022

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.