இருபெரும் நடிகருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது – ‘வாரிசு’, ‘துணிவு’ குறித்து விஷ்ணுவிஷால்!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ’கட்டா குஸ்தி’ என்ற திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி வெளியான உடனே சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் நிச்சயம் விஷ்ணு விஷாலுக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

Gatta Kushthi, Vishnu Vishal, Thunivu, Varisu, 02nd Dec 2022

இந்த நிலையில் ’கட்டா குஸ்தி’ படத்தை பார்த்தபின் மதுரை ரசிகர்கள் மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணுவிஷால், ‘என்னுடைய படத்திற்கு கதை மட்டுமே மிகவும் முக்கியமானது. கதை மட்டுமே ஒரு படத்தை வெற்றி பெறச் செய்யும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் என்னுடைய படங்கள் ஸ்லோவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெற்றி அடையும். என்னுடைய படத்திற்கு தரும் விமர்சனங்களை எதுவாக இருந்தாலும் ஏற்று கொள்வேன். விமர்சனங்களால் தான் நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கின்றேன் என்று தெரிவித்தார்.

Gatta Kushthi, Vishnu Vishal, Thunivu, Varisu, 02nd Dec 2022

மேலும் விஜய்யின் ’வாரிசு’ மற்றும் அஜித்தின் ’துணிவு’ ஆகிய இரண்டு படங்களை பார்க்க நான் ஆவலாக உள்ளேன் என்றும் இருபெரும் நடிகருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.