‘தளபதி 67’ படத்தில் கார்த்திக் நடிக்க மறுத்துவிட்டாரா? காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கும் திரைப்படமான ’தளபதி 67’ படத்தில் பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் விஷால் மெயின் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அதேபோல் மூன்று பிரபல நடிகைகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Karthik, Vijay, thalapathy67, Logesh Kanagaraj, 02nd Dec 2022

இந்த நிலையில் ’தளபதி 67’ படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பதற்காக படக்குழுவினர் கார்த்திக்கை அணுகினார்கள் என்றும் ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டதுடன் அதற்கான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் கார்த்திக் தற்போது கால் மூட்டுவலி பிரச்சினையில் இருப்பதாகவும் அதனால் அவரால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து நிற்க முடியாது என்பதால் அவர் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Karthik, Vijay, thalapathy67, Logesh Kanagaraj, 02nd Dec 2022

கார்த்திக் தற்போது பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதால் ’தளபதி 67’ படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது என லோகேஷ் கனகராஜ் இடம் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த கேரக்டரில் தான் தற்போது இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.