விஜய், ரன்வீர் சிங் இணைந்தால் அது மாஸ் படமாக இருக்கும்

பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவான ‘சர்க்கஸ்’ திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Vijay, Ranveer, Rohith sheety, 02nd Dec 2022

இந்த நிலையில் ‘சர்க்கஸ்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷெட்டி, ‘ ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்பட பிரபல தென்னிந்திய நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக கூறியிருந்தார்.

இந்தநிலையில் விஜய் மற்றும் ரன்வீர் சிங் ஒரு படத்தில் இணைய வாய்ப்பு உள்ளதா? அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அந்த படத்தை நீங்கள் இயக்குவீர்களா? என்று கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

Vijay, Ranveer, Rohith sheety, 02nd Dec 2022

விஜய் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய இருவருமே மிகச் சிறந்த டான்சர்கள். இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்தால் அந்த படம் மாஸ் படமாக இருக்கும் என்றும் அப்படி ஒரு வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் நிச்சயம் இயக்குவேன் என்று கூறிஇருந்தார்.