வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் குறித்த மாஸ் தகவல்

பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Varisu, Vamsy, Thaman, Vivek, 02nd Dec 2022

இந்நிலையில் வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’ என்ற முதல் சிங்கிள் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ‘வாரிசு’ திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் வரும் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Varisu, Vamsy, Thaman, Vivek, 02nd Dec 2022

‘தீ’ என்று தொடங்கும் இந்த பாடலை விவேக் எழுதியுள்ளதுடன் தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.