அஜித்தின் ஏகே 62 புதிய கெட்டப்.. வைரலாகும் புகைப்படம்

தல அஜித் கடந்த சில மாதங்களாக ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த படத்தின் கேரக்டருக்காக நீண்ட தாடியுடன் காணப்பட்டார். இந்த நிலையில் தற்போது ’துணிவு’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்ட நிலையில் அஜித் தாடியை எடுத்துவிட்டார்.

Ajith, Thunivu, Ak62, 01st Dec 2022

இந்த நிலையில் அஜித் தற்போது தாடி எடுத்து க்ளீன் ஷேவுடன் தலைமுடியின் கலரை மாற்றி உள்ள புதிய கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அஜீத் தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் உள்ளார். இந்த மாஸ் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’ஏகே 62′ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க உள்ளது. மேலும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.