‘தளபதி 67’ படத்தின் பூஜை, டீசர் குறித்த அப்டேட்

பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’வாரிசு’ திரைப்படம் ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘தளபதி 67’ திரைப்படம் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியானது.

Logesh Kanagaraj, Vijay, Thalapathy67, Varisu, 01st Dec 2022

இந்த நிலையில் ஏற்கனவே வெளிவந்த செய்தியின் படி டிசம்பர் 5-ஆம் தேதி ’தளபதி 67’ படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் பூஜைக்கு பின் இரண்டு நாட்கள் கழித்து இந்த படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Logesh Kanagaraj, Vijay, Thalapathy67, Varisu, 01st Dec 2022

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படமும் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே டீசர் வெளியானது. அதே பாணியில் ’தளபதி 67’ படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் இந்திய திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளதால் இந்த திரைப்படம் வசூலில் பெரும் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.