முன்னணி பிரபலங்களின் பட தயாரிப்பாளர் மரணம் – திரையுலகினர் இரங்கல்!

தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலங்களான கமலஹாசன், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கே முரளிதரன் திடீரென மாரடைப்பால் காலமானர். இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

K Muralitharan, 01st Dec 2022

கே முரளிதரன் லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற பிரபல தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்ததோடு பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். சரத்குமார் நடித்த ’அரண்மனை காவலன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக வலம் வந்த கே முரளிதரன் அதன்பின்னர் கமல்ஹாசனின் ’அன்பேசிவம்’ விஜய்யின் ’பகவதி’ சூர்யாவின் ’உன்னை நினைத்து’ தனுஷின் ’புதுப்பேட்டை’ சிம்புவின் ’சிலம்பாட்டம்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே முரளிதரன் அவர்கள் இன்று கும்பகோணத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.