‘வாரிசு’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ‘துணிவு’ படக்குழுவினர்களின் திட்டம் என்ன?

அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘வாரிசு’ மற்றும் அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது வாரிசு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Vijay, Varisu, Thunivu, 01st Dec 2022

இந்த நிலையில் ஜனவரி 12 அல்லது 13 ஆம் தேதி ’வாரிசு’ மற்றும் ‘துணிவு’ திரைப்படங்கள் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்திருந்தது. இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் பிரிட்டன் ரிலீஸ் உரிமையை பெற்ற அஹிம்சா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Vijay, Varisu, Thunivu, 01st Dec 2022

ஜனவரி 12ஆம் தேதி வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் சென்சார் சான்றிதழ் வந்த பிறகே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ‘துணிவு’ படக்குழுவினர்களின் திட்டம் என்ன? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ‘துணிவு’ திரைப்படமும் அதே ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா? அல்லது ஒரு நாள் முன்போ பின்போ ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.