ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான ’காசேதான் கடவுளடா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில் எதிர்பாராத காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

’காசேதான் கடவுளடா’ என்ற திரைப்படம் கடந்த 1972 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 50 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வரும் டிசம்பர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் மிர்ச்சி சிவா ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, ஊர்வசி, ஷிவாங்கி, புகழ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசன்னா குமார் ஒளிப்பதிவில், நாதன் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார்.
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.