சந்திரமுகி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகையா..

கடந்த 2005ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இந்தநிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது என்பது தெரிந்ததே.

P. Vasu, Kankana ranavath, Ragawa Lawrence, Santhiramuki2, Rathika, Vadivelu, 30th Nov 2022

சந்திரமுகி 2 படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருவதுடன் வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஃபிளாஷ் பேக் காட்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

P. Vasu, Kankana ranavath, Ragawa Lawrence, Santhiramuki2, Rathika, Vadivelu, 30th Nov 2022

சந்திரமுகி 2 படத்தின் கதையை கேட்ட நடிகை கங்கனா நான் கண்டிப்பாக இப்படத்தில் அதுவும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்று இயக்குனர் பி. வாசுவிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பி.வாசு இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகை கங்கனாவிற்கு கொடுத்துள்ளாராம்.