செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் இந்தப்படத்தின் ’சண்டை வீரச்சி’ என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கம்போஸ் செய்து விவேக் எழுதியுள்ள இந்த பாடலை மாரியம்மாள் என்பவர் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பப்படுகின்றது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ராணா உள்பட பலரது நடிப்பில்உருவாகியுள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.