மேலதிக சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல இருக்கும் சமந்தா

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

Samantha, Vijay Thevarakonda, Kushi, 29th Nov 2022

இந்த நிலையில் நடிகை சமந்தா மேலதிக சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல உள்ளதாகவும் அங்கு அவர் சில மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமந்தா தென்கொரியாவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பின்னர் அவர் விஜய் தேவரகொண்டா உடன் நடிக்கும் ’குஷி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Samantha, Vijay Thevarakonda, Kushi, 29th Nov 2022

இந்த நிலையில் நடிகை சமந்தா விரைவில் குணமாகி மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றனர்.