மூன்று மொழிகளில் உருவாகவுள்ள தனுஷின் அதிரடி ஆக்ஷன் படம் – இயக்குனர் இவரா?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’வாத்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது அவர் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Danush, Sekar Kammula, 28th Nov 2022

இந்த நிலையில் தனுஷ் ’கேப்டன் மில்லர்’ படத்தை முடித்தவுடன் அவர் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பூஜை நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Danush, Sekar Kammula, 28th Nov 2022

’நீ எங்கே என் அன்பே’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய சேகர் கம்முலா தனுஷை இந்தப்படத்தில் வித்தியாசமான கோணத்தில் திரையில் காட்டுவார் என்று கூறப்படுகிறது. இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.