மிகப்பெரிய வெற்றி கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் விஷ்ணு விஷால்?

கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலாபால் நடித்த ‘ராட்சசன்’ என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Vishnu Vishal, Ramkumar, Radsasan, 28th Nov 2022

மேலும் படத்தை இயக்கிய இயக்குனர் ராம்குமார் ‘ராட்சசன்’ படத்தை தவிர கடந்த 4 ஆண்டுகளாக வேறு எந்த திரைப்படத்தையும் இயக்காத நிலையில் தற்போது புதிய திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் ‘ராட்சசன்’ ராம்குமார் இயக்க இருக்கும் அடுத்த படம் முழுக்க முழுக்க ஒரு லவ் ஸ்டோரி என்றும் இந்த படத்திலும் ‘ராட்சசன்’ நாயகன் விஷ்ணு விஷால் தான் இந்தப்படத்திலும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Vishnu Vishal, Ramkumar, Radsasan, 28th Nov 2022

இந்த படத்தை தயாரிக்க தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வாய்ப்பிருப்பதாகவும் அதுமட்டுமன்றி இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த விஷ்ணுவிஷால் – ராம்குமார் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதை அடுத்து இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.