நயன்தாராவின் ’கோல்டு’ படம் குறித்த மாஸ் அப்டேட்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’கோல்டு’ திரைப்படம் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Albons Puththiran, Gold, Nayanthara, Priththiviraj, 28th Nov 2022

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய ’நேரம்’ மற்றும் ’பிரேமம்’ ஆகிய படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டிசம்பர் 1ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீஸர், டிரைலர், சிங்கிள் பாடல் என எந்தவிதமான புரமோஷனும் இல்லாமல் நேரடியாக படம் ரிலீஸ் ஆகிறது என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Albons Puththiran, Gold, Nayanthara, Priththiviraj, 28th Nov 2022

இந்த நிலையில் ’கோல்டு’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளதுடன் மேலும் இந்தத் திரைப்படம் 165 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 45 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

Albons Puththiran, Gold, Nayanthara, Priththiviraj, 28th Nov 2022