ஏகே 62 படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

விஜய்யின் ‘வாரிசு’க்கு போட்டியாக அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் துணிவு படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Thunivu, Varisu, Vignesh Sivan, Vijay, Ajith, AK62, 28th Nov 2022

இந்த நிலையில் ’துணிவு’ படத்தை அடுத்து லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் அஜீத் நடிக்க இருக்கும் ‘ஏகே 62’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்தன.

Thunivu, Varisu, Vignesh Sivan, Vijay, Ajith, AK62, 28th Nov 2022

இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘ஏகே 62’படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் கொடுத்து பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய்யின் ’தளபதி 67’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே வியாபாரம் தொடங்கி விட்டதைப் போலவே அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.