‘மாஸ்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ போல் மூன்று மொழிகளிலும் வெளியாக இருக்கும் ‘வாரிசு’

விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் ’பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸாகும் ‘வாரிசு’ திரைப்படமும் மூன்று மொழிகளில் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Varisu, vijay, Vamsy, thilraji, Thaman, Master, Beast, 28th Nov 2022

வம்சி இயக்கத்தில், தில் ராஜ் தயாரிப்பில், தமன் இசையில் தளபதி விஜய் நடிப்பில், உருவான திரைப்படம் ‘வாரிசு’. இந்தப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

Varisu, vijay, Vamsy, thilraji, Thaman, Master, Beast, 28th Nov 2022

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படத்தை இந்தி மொழியிலும் டப் செய்து ஒரே நாளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், ஹிந்தி டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.