ராம் சரண் தேஜா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற பான் – இந்தியா திரைப்படத்தில் நடித்தவர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ’ஆர்சி 15’ என்ற பான் – இந்தியா படத்தில் ராம் சரண் தேஜா நடித்து வருகின்றார்.

Puchchibabu shana, Ramsaran Deya, Rajamouly, 28th Nov 2022

இந்த நிலையில் ராம் சரண் தேஜா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராம்சரண் தேஜா நடிக்கவிருக்கும் ’உப்பன்னா’ படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாகவும் தமிழ், தெலுங்கு உள்பட பான் இந்திய படமாக உருவாகும் இந்தப் படம் வலிமையான திரைக்கதை வாய்ந்தது என்றும் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் நம்பப்படுகின்றது.

Puchchibabu shana, Ramsaran Deya, Rajamouly, 28th Nov 2022

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்தப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

Puchchibabu shana, Ramsaran Deya, Rajamouly, 28th Nov 2022