முக்கிய இடத்தில் விஜயின் வாரிசை ஓரங்கட்டிய அஜித்தின் துணிவு

அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாளுக்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.

இந்நிலையில் துணிவு படத்தின் வியாபாரம் விறுவிறுவென நடந்து இதுவரை அதிக திரையரங்குகளை பிடித்துவிட்டது, ஆனால் விஜய்யின் வாரிசு பட வியாபாரம் சமீபத்தில் தொடங்கிய நிலையில் திரையரங்குகள் மிகவும் குறைவாக பிடித்துள்ளது.

இதில் சென்னையை அடுத்து வசூலில் முக்கிய இடமாக கருதப்படும் திருச்சி-தஞ்சாவூர் ஏரியாவில் மிக குறைந்த திரையரங்குகளை வாரிசு பெற்றுள்ளதாம். 45 ஸ்கிரீன்களை வாரிசு பிடிக்க அஜித்தின் துணிவு 60 ஸ்கிரீன்களை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள்.

முக்கிய இடத்தில் விஜயின் வாரிசை ஓரங்கட்டிய அஜித்தின் துணிவு