‘டேய் என்னங்கடா எல்லாம் ஹாலிவூட் பேய்களா இருக்குது’ – யோகிபாபுவின் ‘பூமர் அங்கிள்’ டிரைலர்

கார்த்திக் தில்லை என்பவர் இயக்கத்தில் யோகி பாபு, ஓவியா உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ‘பூமர் அங்கிள்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைத்தளத்தில் ‘பூமர் அங்கிள்’ டிரைலர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Karthik Thillai, Robo shankar, Yogibabu, Oviya, Boomer uncle, 27th Nov 2022

மேலும் யோகிபாபு உள்பட ஓவியா, ரோபோ சங்கர், தங்கதுரை, சோனா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்டது என்பதும் ஓவியாவின் கவர்ச்சி உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த படத்தில் இருப்பதாகவும் இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

இந்த படம் முழுக்க சிரிக்க வைக்கும் காமெடி படம் என்பதும், இடையிடையே த்ரில்லான பேய்க்காட்சிகள் இருக்கும் என்பதும் டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.