‘மாமன்னன்’ வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறிய பிரபல இசையமைப்பாளர்!

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் தனது சமூக வலைதளத்தில் ‘மாமன்னன்’ படத்தின் வீடியோவை வெளியிட்டு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

Uthayanidhi Stalin, AR Rahuman, Mamannan, Mari selvaraj, 27th Nov 2022

‘மாமன்னன்’ திரைப்படத்திற்கு இசை அமைக்கும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அந்த படத்தின் வீடியோ கிளிப்பை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்தநிலையில் அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

‘மாமன்னன்’ திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் இணையும் முதல் படம் என்றும், அதேபோல் மாரி செல்வராஜ் அவர்களுடன் இணையும் முதல் படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் மாரி செல்வராஜ் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவருடைய கருத்து சிந்தனையே வித்தியாசமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Uthayanidhi Stalin, AR Rahuman, Mamannan, Mari selvaraj, 27th Nov 2022

மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் நீடூடி வாழ வேண்டும் என்றும் ஏஆர் ரகுமான் அந்த வீடியோவில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏஆர் ரகுமான் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றது.