சூப்பர் ஹீரோ பிரபாஸ்க்கு ஜோடியாகும் இரண்டு பிரபல நடிகைகள்

தென்னிந்திய திரையுலகின் பிரபல சூப்பர் ஹீரோவாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Maruthi, Prabhas, Nithi agarwal, Malavika mohana, 27th Nov 2022

இந்தநிலையில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த மாளவிகா மோகனன் மற்றும் சமீபத்தில் வெளியான உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்த நிதி அகர்வால் ஆகிய இருவரும் பிரபல சூப்பர் ஹீரோ பிரபாஸின் படத்திற்கு ஜோடியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் மாருதி இயக்கவுள்ள படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி நிலையில் இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரபாஸ் நடித்த ’ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்திருக்கும் ரித்தி குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Maruthi, Prabhas, Nithi agarwal, Malavika mohana, 27th Nov 2022

மேலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.