மீண்டும் காயம் அடைந்துள்ளார் நடிகர் அருண் விஜய்

முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய் கடந்த மாதம் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று தற்போது தான் குணமாகிய நிலையில் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Arunvijay, 27th Nov 2022

அருண் விஜய் ‘யானை’, ’சினம்’ ஆகிய வெற்றி படங்களை அடுத்து தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் ’அச்சம் என்பது இல்லையே’. ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் எமிஜாக்சன் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது படத்தின் சண்டைக் காட்சிகளின் போது அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது.

Arunvijay, 27th Nov 2022

இதனை அடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: என்னுடைய அனைத்து விதமான செயல்களுக்குப் பின்னால் இதுபோன்ற காயங்கள் இருப்பதை நீங்கள் காணலாம். ஆனால் எத்தனை முறை காயம் அடைந்தாலும் டூப் இன்றி சொந்தமாக ஸ்டண்ட் செய்வதையே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு காயம் ஏற்பட்டது குறித்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் ரசிகர்கள் அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்ததோடு அவர் விரைவில் குணமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.